Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News

யாழில் ஒரு மாதத்தில் 700 பேருக்கு கண்சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவர்கள்!

யாழ் போதனா வைத்தியசாலையில் வட மாகாணத்தில் இருக்கின்ற பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் கிரமமான கண் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ALAKA FOUNDATION, Malaysia மற்றும் Assist RR / UK நிறுவனத்தி ஒழுங்குபடுத்தலில் கண்சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியவர்களுக்கு போக்குவரத்து ஒழுங்கு மேற்கொள்ளப்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டு கண்சத்திர சிகிச்சை நடைபெறுகின்றது. இன்று 30.03.23 வவுனியா…

விவசாயிகளுக்கும் QR முறைமை இனிவரும் காலங்களில்!

நாட்டில் பெற்றோலுக்கு QRநடைமுறை தற்போது உள்ள நிலையில் சமூர்த்திக்கொடுப்பனவு பெறுபவர்களுக்கும் இந்த நடைமுறையினை கொண்டுவரும் நடவடிக்கையில் பதிவு நடவடிக்கைகள் கிராமங்கள் தோறும் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் விவசாயிகளுக்கும் உரம் மற்றும் கிருமிநாசினிகளை பகிர்ந்தளிப்பதற்காக QR குறியீட்டு முறைமையை அறிமுகப்படுத்தவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

வெடுக்குநாரி -மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் பார்வை!

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் பார்வை! வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் பார்வை! வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வைக்கப்பட்ட சிவன் சிலைகள் மற்றும் வழிபாட்டு பொருட்கள் உடைத்து எறியப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய…

இலங்கை அரசின் தொலைக்காட்சி ஒன்று படுநட்டத்தில் இயங்குகின்றது பணிவிலக அறிவிப்பு!

இலங்கை அரசாங்கத்தின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நட்டத்தில் இயங்கிவருவதாகவும் அதில் பணியாற்றுபவர்கள் தாமாக முன்வந்து பதவி விலகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதவி விலகுபவர்களுக்கான விண்ணப்பபடிவங்கள் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தாமாக முன்வந்து வெளியேறும் றூபவாகினி கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 25 இலட்சமும்,குறைந்த பட்சமாக 5 இலட்சமும் இழப்பீடாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பல நிறுவனங்கள் நட்டம்…

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவுகளின் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்திவரும் போராட்டம் 2213 ஆவது நாளான 30.03.2023 இன்று நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின்  சங்கத்தின் அலுவலகத்திற்கு முன்னால் முல்லைத்தீவு முதன்மை வீதியில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுக்கு நீதி கோரி…

புதுக்குடியிருப்பில் நடைபாதை வியாபாரத்தினார் சந்தை வணிகர்கள் பாதிப்பு மனு கையளிப்பு!

புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் நடைபாதை வியாபாரிகளின் வியாபார நடவடிக்கையினால் சந்தை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொதுச்சந்தை அனைத்து வணிபங்களின் உரிமையாளர்கள் முல்லைத்தீவு உள்ளுராட்சி மன்ற ஆணையாளருக்கு மனுஒன்றினை கையளித்துள்ளார்கள். அந்த மனுவில்புதுக்குடியிருப்பு பொதுச்சந்தை மரக்கறி வாணிப உரிமையாளர்கள் மற்றும் புடவை வாணிப உரிமையாளர்கள் பழக்கடை வாணிப உரிமையாளர்கள் மற்றும் மீன் வாணிப உரிமையாளர்கள் ஆகிய நாம் தங்களுக்கு…

கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்படவேண்டும்-யாழ் மறைமாவட்ட குருமுதல்வர்!

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தில் புத்தர் சிலைகள் அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் யாழ்ப்பாண மாவட்ட செயலருக்கு வலியுறுத்தியுள்ளார். யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் இந்த கோரிக்கையை யாழ்ப்பாண மாவட்ட செயலருக்கு கடிதம் மூலம் விடுத்துள்ளார். அக்கடிதத்தில், புனித அந்தோனியார் திருத்தலம் அமைந்துள்ள கச்சதீவில் புத்தர்…

வடக்கில் அதிகரிக்கும் பௌத்த ஆக்கிரமிப்பு-எதிர்ப்பு போராட்டம்!

இலங்கையின் வடக்கில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் யாழ்.நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பௌத்த விகாரையாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையினை கண்டித்தும், கச்சதீவில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புபோராட்டம் ஒன்று இன்று 29.03.23 மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெடுந்தீவு வெடியரசன் கோட்டையினை ஆக்கிரமித்துள்ள தொல்லியல் திணைக்களம் அதனை பௌத்த விகாரையாக அடையாளப்படுத்தி, அதன்…

வடக்கு கிழக்கில் தொல்லியல் (பௌத்த) அடையாளங்கள்!

வடக்கு கிழக்கில் தொல்லியல் (பௌத்த) அடையாளங்கள் இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள சைவ ஆலயங்கள். ●ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரம் ஆலயம் ●மாந்தைகிழக்கு பத்திரகாளி அம்மன் கோவில் ●சிறீ சித்திரவேலாயுதம் முருகன் கோவில் ●குமுழமுனை ஆஞ்சநேயர் கோவில் ●பாண்டியன்குளம் சிவன் கோவில் ●வவுனிக்குளம் சிவபுரம் சிறீமலை கோவில் ●குமுழமுனை குறிஞ்சிக்குமரன் கோவில் ●மன்னார் திருக்கேதீஸ்வரக் கோவில் ●மயிலிட்டி போர்த்துக்கேயர் கோவில்…

தொடர்ச்சியான தமிழினஅழிப்பினை மேற்கொண்ட அரசு இன்று மத்தினை பயன்படுத்தி அழித்துவருகின்றது!

கடந்த காலங்களில் தொடர்ச்சியாக தமிழ்இனத்தினை அழித்து வந்த சிங்கள தேசம் இன்று மதத்தினை பயன்படுத்தி அதன் ஊடாக எமது மதஸ்தாலங்களை அழிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது இந்த விடையத்தினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என்று ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார். 28.03.23. இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பினை நடத்தி…