Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

முல்லைத்தீவு

கொல்லவிளாங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு!

 23.03.23 வீட்டிலிருந்து மின்சாரத்தினை வெளியில் எடுத்து முற்றத்தில்  வெளிச்சம் போடுவதற்காக எடுக்கப்பட்டிருந்த நிலையில், மின்சார வயரினை பிடித்த வேளையிலேயே குறித்த  பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர் இலக்கம் 92 கொல்லவிளாங்குளம் ,வவுனிக்குளம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் சுதாஜினி ( 38 ) வயது  பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் குறித்த பின் திருமணமாகி…

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு 200 மில்லியன் செலவில் ஒட்சிசன் ஆலை!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் நோயாளர்களின் தேவைக்காக ஒட்சிசன் நிரப்ப நிலையம் இல்லாத நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து ஒட்சிசன் பெற்றுக்கொண்டுவந்து நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவேண்டிய நிலை கடந்த காலத்தில் தொடர்ந்து வந்துள்ளது  இந்த நிலையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட கொவிட் 19 தொற்று காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அமைந்த கொவிட்19 சிகிச்சை நிலையத்திற்கு தேவையான ஒட்சிசனை…

முத்தயன்கட்டு குளத்தின் கீழ் 3320.5 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை!

முத்தயன்கட்டு குளத்தின் கீழ்   3320.5 ஏக்கர்  நெற்செய்கைக்கும்  739 ஏக்கரில்  உப உணவு பயிர்ச்செய்கைக்கும் தீர்மானம்   முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட முத்தயன்கட்டு குளத்தின் கீழான சிறுபோக செய்கை தொடர்பான கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் தலைமையில் நேற்றைய தினம் (21.03.2023)  ஒட்டுசுட்டான் நீர்பாசன திணைக்களத்தின் அலுவலகத்தில்…

முல்லைத்தீவில் மாணவர்கள் இன்மையால் 2 பாடசலைகளுக்கு மூடு விழா!

வடமாகாணத்தில் பாடசாலைகளில் மாணவர்கள் இன்மையால் 103 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் 49 பாடசாலைகளும்,கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பாடசாலைகளும்,மன்னார் மாவட்டத்தில் 10 பாடசாலைகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பாடசாலைகளும்,வவுனியா மாவட்டத்தில் 34 பாடசாலைகளும் இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. வவுனியா வடக்கு கல்விவலயத்தில் இந்த எண்ணிக்கை…

முல்லைத்தீவில் நீர்கொழும்பு வாசிக்கு 46 ஏக்கரில் காணி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் பகுதியில் கொக்கிளாய் கடல் நீர் ஏரியினை அண்மித்த கடற்கரைப்பகுதியில் நீர்கொழும்பில் உள்ள தனி நபர் ஒருவருக்கு 46 ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்வதற்கான காணிஅளவீட்டு மதிப்பாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளருக்கோ மாவட்ட செயலாளருக்கோ எந்தவித அறிவிப்புக்களும் வழங்காத நிலையில் மகாவலி அபிவிருத்தி திட்டம் இந்த நடவடிக்கையினை…

மான்னுருவி பகுதியில் அரைக்கும் ஆலையினை அரைத்து தள்ளிய யானை!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மான்னுருவி பகுதியில் நாகரத்தினம் பாஸ்கரன் என்பவரின் அரைக்கும் ஆலைக்குள்  யானை புகுந்து துவம்சம் செய்துள்ளது. குறித்த பகுதியில் அரைக்கும் ஆலைவைத்து தமது வாழ்வாதாரத்தினை கொண்டு நடத்திய நபரின் அரைக்கும் ஆலைக்குள் நேற்று 19.03.23 இரவு புகுந்த காட்டுயானை அரைக்கும் ஆலையின் ஒருபகுதி சுவரினை உடைத்து வீழ்ந்தியுள்ளதுடன் மா அரைக்கும் இயந்திரம் மற்றும் தூள்…

முல்லைத்தீவில் போலி தங்க முத்துக்களை விற்பனை செய்யமுயன்றவர் கைது!

முல்லைத்தீவில் போலியா தங்கமுலாம் பூசப்பட்ட முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் வெலிஓயா பகுதியினை சேர்ந்த ஒருவரை முல்லைத்தீவு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். இந்த சம்பவம் 19.03.23 இன்று இடம்பெற்றுள்ளது ஜனகபுரம் வெலிஓயாவினை சேர்ந்த 54 அகவையுடைய சந்தேக நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். போலி தங்கமுலாம் பூசப்பட்ட 1400 முத்து மணிகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக…

அமைச்சர் கொடுத்த இந்திய இழுவை படகு கடலில் முல்லை கடலில்மூழ்கியுள்ளது!

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுளையும் போது கைதுசெய்யப்படும் இந்திய மீனவர்களின் இழுவைப்படகுள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அரசுடமையாக்கப்பட்ட படகுகளை வடக்கினை சேர்ந்த மீனவ அமைப்புக்களுக்கு ஆழ்கடலில் தொழில்செய்தற்காக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடந்த வாரம் முல்லைத்தீவுமாவட்ட கடற்தொழில் சம்மேளனத்திற்கு முல்லைத்தீவு கடலில் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக வழங்கப்பட்ட இந்திய இழுவைப்படகு ஒன்று முல்லைத்தீவு…

முல்லைத்தீவில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் கைது!

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட நால்வரை முல்லைத்தீவு பொலீசார் நேற்று இரவு 18.03.23 கைதுசெய்துள்ளார்கள். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் புதுமாத்தளன் கடற்கரையினை அண்டிய பகுதியில் நால்வர் நிலத்தினை தோண்டிக்கொண்டிருந்த வேளை இராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவம் இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு பொலீசார்…

முல்லைத்தீவில் இருந்து யாழிற்கு 20 ஆயிரம் கிலோ அரிசி முதற்கட்டம்!

அரசாங்கம் விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்த நெல்லினை அரியாக பொதிசெய்து மக்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது இதற்காக முல்லைத்தீவு மாவட்த்திற்கு 100 மில்லியன் ரூபா ஓதுக்கீடு செய்யப்பட்டு தனியார் நெல் ஆலை உரிமையாளர்கள் ஊடாகவும் கமநலசேவை திணைக்களங்கள் ஊடாகவும் விவசாயிகளிடம் இருந்து 100 ரூபாவிற்கு நெல்லினை கொள்வனவு செய்துள்ளார்கள். இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள சமூர்த்தி…