முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் மணவாளன் பட்டமுறிப்புக்கு அண்மித்த பகுதியில் பொலீசாரின் வாகனம் ஒன்று தடம்புரண்டுவிபத்தினை சந்தித்துள்ளது.
இந்த சம்பவம் 30.10.2025 இன்று காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த வீதியில் பயணித்த பொலீஸ் ஜீப் ஒன்று வீதியின் குறுக்கே மாடுகள் வந்ததால் வீதியினை விட்டு விலகி விபத்தினை சந்தித்துள்ளது.இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த பொலீசார் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில் பொலீஸ் ஜீப் கடுமையாக சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலீசார் விசாரணையினை முன்னெடுத்து வாகனத்தினை மீட்டு கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் காலபோக நெற்செய்கை இடம்பெற்றுள்ளதால் வீதிகளில் கால்நடைகளின் நடமாட்டம் தற்போது அதிகாரித்து காணப்படுகின்றது இதனால் கால்நடைகளால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது சாரதிகள் மிகவும் கவனமாக வாகனங்களை ஓட்டிக்கொள்ளவும்.

