முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட விசுவமடு மேற்கு பகுதியில் உள்ள நெத்தலியாறு பாடசாலை வீதியின் அபிவிருத்திப்பணிக்காக பெற்றுக்கொண்ட ஒப்பந்த தாரர் தலைமறைவாகியுள்ளதாகவும் வேலைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை செயலாளரது முயற்சியின் பயனாக 2025ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடையினூடாக விசுவமடு மேற்கு நெத்தலியாறு பாடசாலை வீதி புனரமைப்பு வேலைக்கான ஆரம்ப நிகழ்வு கடந்த ஒக்டோபர் மாதம் சபையின் கௌரவ தவிசாளர் மற்றும் பொதுமக்களின் ஏற்பாட்டில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. குறித்த அபிவிருத்தி ஆனது இரு கட்டங்களாக 970 மீற்றர்கள் தூரவீதி 14.28 மில்லியன் ரூபாயில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர் கிராம மக்கள் அமைப்புக்கள் ஒன்றிணைந்து அபிவிருத்தி பணியினை தொடக்கிவைத்துள்ளார்கள்.
இந்த வீதி அபிவிருத்தி பணியில் திருப்த்தி இல்லை என பிரதேச மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளதுடன் ஒப்பதந்த தாரரினை பேசியும் உள்ளார்கள்.
இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலனிடம் கேட்டபோது தேசிய மக்கள் சக்தியின் காட்சிசார்ந்தவர்கள் குறித்த அபிவிருத்தி பணியினை குழப்பியுள்ளார்கள் குறித்த வீதி அபிவிருத்தி வேலை சரியில்லை என்றுசொன்னால் அதனை பிரதேச சபையிடம் மக்கள் தெரிவிக்கவேண்டும் இதனை விடுத்து ஒப்பந்ததாரர்களுக்கு பேசி அச்சுறுத்தலினை அந்த பிரதேசத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மேற்கொண்டுள்ளதன்
காரணமாக ஒப்பந்ததாரர் வேலையினை விட்டுவிட்டு ஓடிவிட்டார்
இந்த நிலையில் ஒப்பந்த தாரரினை தொலைபேசியில் தொடர்புகொண்டும் பதிலளிக்கவில்லை அந்த ஒப்பந்த தாரருக்கு சபையினால் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது அந்த அபிவிருத்தி பணியினை பொறுப்பெடுத்து தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும் என்று.