Tuesday, August 26, 2025
HomeJaffnaதமிழின அழிப்புக்கு நீதி கோரி கையெழுத்துப் போராட்ட ஊர்தி பவனி!

தமிழின அழிப்புக்கு நீதி கோரி கையெழுத்துப் போராட்ட ஊர்தி பவனி!

தமிழின அழிப்புக்கு நீதி  கோரிய கையெழுத்துப் போராட்ட ஊர்தி பவனி ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்தை சென்றடைந்து முல்லை மாவட்டத்தின் பல்வேறுபட்ட பகுதிகளில் மக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் பணி இன்று 26.08.2025 முன்னெடுக்கப்பட்டுள்ளது

தாயக மண் மயான பூமியா? தமிழின அழிப்புக்கு நீதி கோரிய நீதிக்கான ஓலம் என்ற வாகனபவனி செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து ஆரம்பமாகி நான்கு நாட்கள் கடந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு முள்ளியவளை ஒட்டிசுட்டான் ஆகிய பகுதிகளில் மக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது

இந்த கையெழுத்து ஆனது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழின அழிப்புக்கு நீதி கோரிய இந்த கையெழுத்து போராட்டம் தொடர்ச்சியாக இந்த வாகனப் பவனி தாயகத்தின் பல்வேறுபட்ட பகுதிகளுக்கு சென்று கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments