புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அதிகளவான ஐஸ் போதை பொருளை உட்கொண்ட நபர் உயிரிழந்துள்ளார்!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பத்தாம் வட்டாரம் எனும் இடத்தில் நண்பர்கள் மூவர் ஐஸ் போதைப் பொருள் பாவித்து வந்துள்ளார்கள்
இதில் ஒருவர் அதிகளவான ஐஸ் போதை பொருள் உட்கொண்ட நிலையில் மயங்கி விழுந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று மாலை ஆறு முப்பது மணி அளவில் இடம்பெற்றுள்ளது
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஏனைய இருவர்களும் குறித்த நபர் மயங்கி விழுந்ததை அச்சமுத்து குறித்த பகுதியிலிருந்து வெளியேறியுள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு போலீஸ் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பு ஒன்று நகர் பகுதியில் உள்ள பற்றைகாட்டுக்குள் ஒருவர் மயங்கி கிடப்பதாக கிடைத்துள்ளது இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த புதுக்குடியிருப்பு போலீசார் மயங்கிய நிலையில் உள்ளவரே மீட்டு புது குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்
அங்கு அவர் உயிரிழந்து நிலைமை தெரிய வந்துள்ளது 23 அகவையுடைய 10ம் வட்டாரத்தினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருக்கின்றார்.
உயிரிழந்தவரின் உடலம் புதுக் குடியிருப்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அதிகளவான போதைப் பொருள் பாவனை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது