முன்பள்ளி சிறார்களை ஊக்கப்படுத்தி அவர்களின் கல்வி செயற்பாட்டை முன்னெடுக்கும் நோக்கில் கற்றல் உபகரணங்கள் இன்றையதினம் (30.12.2024) மாலை வற்றாப்பளையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
வற்றாப்பளை, கேப்பாபுலவு, பிலக்குடியிருப்பு ஆகிய கிராமாங்களை உள்ளடக்கிய 80
முன்பள்ளி சிறார்களுக்கு புலம்பெயர் நாட்டில் வசிக்கும் பிரதீபராஜ் சிந்துஜா தம்பதிகளின் செல்வப்புதல்வன் உருத்திரதேவா அவர்களின் நான்காவது பிறந்த தினத்தை முன்னிட்டு சமூக பணியாக குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
சமூக செயற்பாட்டாளர் ஞா.யூட்சன் தலைமையில் இடம்பெற்ற கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை விவசாய அமைச்சர் க.சிவனேசன் , முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.