இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இயலாமையுள்ள மீனவர்கள் விவசாயிகளுக்கு வலுவூட்டும் நோக்கில் 18.12.24 அன்று 23 அங்கவீனர்களுக்கு செயற்கை அவயங்கள் வழங்கும் நிகழ்வு ஒன்று முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ளது 59 ஆவது படைப்பிரிவின் 1 ஆவது பிரிவில் இன்று நடைபெற்றுள்ளது.
அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியில் சென்ரர் போ ஹான்டிக்காப் என்ற அமைப்பின் ஒழுங்குபடுத்தலில் இராணுவத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத்தலைமை அதிகாரி,மேஜர் ஜெனரல் ஜே.பி.சி. பீரிஸ் ஆர்.டபிள்யூ பி .ஆர்.எஸ்பி என்.டி.சி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து அவயங்களை வழங்கிவைத்துள்ளார்.
மற்றும் 59 ஆவதுபடைப்பிரினி; உயர் அதிகாரிகளுடன் சென்டர்போ ஹான்டிக்கப்ப அமைப்பின் இணைப்பாள சாந்த அத்தநாயக்க உள்ளிட்டவர்களும் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த கடந்த கால போர் அனர்த்தங்களின் போது கால்களை இழந்த ஒரு பெண் உள்ளிட்ட 23 பேருக்கு செயற்கை கால்கள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.