இலங்கை நாட்டின் தமிழர் தரப்பின் தனித்துவமான பல்துறைசார் கலைஞர்கள் , இலக்கியவாதிகள்,படைப்பாளிகளை உள்ளடக்கியதான தேசியக் கட்டமைப்பான
“ஈழத்துக் கலை இலக்கியப் பேரவை” எனும் கட்டமைப்பின் முதலாவது தெரிவுக்கூட்டம் 10.12.2024 அன்று கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் பி.ப 3.00 மணிக்கு ஆரம்பமானது .தெரிவுகள் சிறப்புற நடைபெற்றது .
தலைமை ஒருங்கிணைப்பாளராக “கலைஇளவரசன்”கலாநிதி-வன்னியூர் செந்தூரன் அவர்களும்,
பொதுச் செயலாளராக பிரபல ஆசிரியரும்,படைப்பாளியுமான சி.வரதராஜன் அவர்களும்
நிதிச் செயலாளராக பிரபல இசையமைப்பாளர் “தேனிசை இளவல்” பி.எஸ்.விமல்ராஜ் அவர்களும்,
உப செயலாளராக படைப்பாளி கங்கா அவர்களும்,
ஏகமனதாக தெரிவுக் கூட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டார்கள்.
மேலும் இவ் அமைப்பின் இயங்குதளத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் மிக்க சபையாகிய பிரதான ஆலோசனை சபையின் தலைவராக மூத்த இலக்கியவாதி -கலாநிதி “தமிழ்மணி” அகளங்கன் அவர்களும்,
பிரதான ஆலோசனை சபை உறுப்பினர்களாக பேராசிரியர் கந்தையா-ஸ்ரீகணேசன் அவர்களும்,
அதிபர் திருவாளர் விக்கினராஜா அவர்களும் தெரிவானார்கள்.
அமைப்பின் நிர்வாக ஒழுங்குபடுத்தலான பொதுச்சபையின் உறுப்பினர்களாக
பிரபல பாடகியும் தமிழ் சரிகமப நிகழ்வின் வெற்றியாளரும், ஈழத்தின் பொக்சிசமுமான,
“ஈழத்தின் இசைக்குயில்” செல்வி கில்மிசா அவர்களும்,
கிரி கலையகத்தின் இயக்குனரும்,பிரபல தொழிலதிபருமான செ.சிவகிரி அவர்களும்,
படைப்பாளி பாபு அவர்களும் ,
படைப்பாளி மணிபுரம் சிவா அவர்களும்,
ஆசிரியரும்,படைப்பாளியுமான பாமா அவர்களும் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார்கள்.
துணைப்பிரிவுகளாக இலக்கியத்துறை சார் தலைவராக படைப்பாளி வன்னியூர் வரன் அவர்களும்,
நிகழ்ச்சி ஏற்பாட்டுப் பிரிவுத் தலைவராக “கலைச்செல்வன்” ஆர்.யூ.எஸ் .பாலா அவர்களும்,
பாரம்பரியக் கூத்துக்கலைப்பிரிவின் தலைவராக அண்ணாவியார் தவேந்திரன் அவர்களும்,
விளையாட்டுத்துறைத் தலைவராக விளையாட்டு வீராங்கனை செல்வி பிரார்த்தனா அவர்களும் தெரிவானார்கள்.
ஈழத்தின் சகலதுறைசார் கலை கலாசாரக் கட்டுமானங்களையும் ஒரே தளத்தில் ஒன்றாக்கி,நீண்டதிட்டமிடலுடன்,தூரநோக்கமான பல வேலைத்திட்டங்களுடன் ஈழத்துக் கலை இலக்கியப் பேரவையானது சகல மாவட்டங்களிலும் இயங்குதளத்தில் 10.12.2024 ஆம் திகதியிலிருந்து தனது பணிகளை ஆரம்பித்திருக்கிறது.
முதலாவது தெரிவுக்கூட்டம் ஆனது மிகவும் காத்திரமாகவும்,தகுதிவாய்ந்ததாகவும்,பல மாவட்டத்தைச் சேர்ந்த ஆளுமைகளை உள்ளடக்கியதாகவும் அமைந்தது பெருமையானது.
“கலையால் நாம் இணைவோம்.
நிலையாக நிழிர்ந்தெழுவோம்”
நன்றி
ஊடகப்பிரிவு
ஈழத்துக் கலை இலக்கியப் பேரவை