Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

வான்பாயும் வவுனிக்குளம்-அழகிய காட்சிகளை பார்வையிட செல்வோர்கள்!

வவுனிக்குளம் வான்பாய்கிறது – சுற்றுலா பிரயாணிகள் பாதுகாப்பான முறையில் வவுனிக்குள அழகினை  கண்டு களிக்கவும்! நீர்பாசன திணைக்களம்

வவுனிக்குளம் வான்பாய்வதனால் சுற்றுலா பிரயாணிகள் பாதுகாப்பான முறையில் வவுனிக்குள அழகாய் கண்டு களிக்குமாரு வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் சுதாகரன் அவர்கள் தெரிவித்தார்

வவுனிக்குளமானது இன்றைய தினம் வான் பாய்வதை கொண்டாடும் முகமாகவும் நீர் மகளை வரவேற்கும் முகமாகவும் நீர்ப்பாசன திணைக்களத்தினரால் நீர்மகளை பொங்கல் செய்து படையலிட்டு வரவேற்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றிருந்தது , அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

மேலும் அவர் தெரிவிக்கையில் ……………………..

வடமாகாண நீர்பாசன திணைக்களத்தின் பரிபாலனத்தில் இருக்கின்ற வவுனிக்குளம் வான் பாய்கின்றது,இந்த குளம் மட்டுமல்ல எமது பரிபாலனத்திளிருக்கின்ற 54 குளங்களில்  40க்கும் மேற்பட்ட குளங்கள் ஏற்கனவே வான் பாய்கின்ற நிலையினை அடைந்திருக்கின்றது. அதே போல இந்த வவுனிக்குளமும் இன்று அதிகாலையிலேயே வான் பாய தொடங்கியிருக்கின்றமை மகிழ்ச்சியாக இருக்கின்றது

இந்த ஆண்டு எங்களுக்கு கிடைத்த கணிசமான மழைவீழ்ச்சியை கொண்டு பல குளங்களில் விவசாய நடவடிக்கையினை மேகொள்ள கூடியவாறு இருக்கின்றது எனபது மட்டற்ற மகிழ்ச்சி

கடந்தவருடங்களில் நாம் முழுமையாக நீரினை பெற்றுக்கொள்ள முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையிலிருந்தோம்  

இந்த ஆண்டு முழுமையாக கிடைக்கப்பெற்றதை அடுத்து சந்தோசமாக உள்ளோம்

அதே போல இந்த குளத்தின் வான் பாய்கின்ற நிகழ்வை பார்க்க வருகின்ற சுற்றுலா பிரயாணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அனைவருக்குமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் ஆகவே தயவு செய்து எமது அறிவுறுத்தலை பின்பற்றி அபாயகரமான இடங்களை தவிர்த்து  பாதுகாப்பான முறையில் நின்று பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

நிச்சயமாக வவுனிக்குள நீர்பாய்ச்சலுடன் வன்னி முழுவதுமே ஒரு நீர்வளத்தை கொண்டு அழகாக காணப்படும் என்பது உண்மை , ஏனெனில் அண்மையில் புதிதாக புனரமைக்கப்பட்ட கல்மடு குளம் கூட இன்று வான் பாய்கின்றது ,

இன்றைய நிகழ்வை ஒரு விமரிசையாக தமிழர் பாரம் பாரிய நடைமுறையினை பின்பற்றி அந்த நீர்மகளை வரவேற்று பொங்கல் செய்து கொண்டாடியிருக்கின்றோம்

நீர்பாசன திணைக்களம் தொடர்ந்தும் தந்து பணியினை செய்யும் என அவர் மேலும் தெரிவித்தார்  

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *