Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் கால்நடைகளை கைவிடும் நிலை-மேச்சல் தரவை இன்மை,கால்நடை திருடர்கள் அதிகம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேச்சல் தரவை இல்லாததால் கால்நடை வளர்பினை கைவிடும் நிலையில் பண்ணையாளர்கள் காணப்படும் அதேவேளை நகரப்புறங்களில் வீடுகளில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்படும் கால்நடைகள் இறைச்சிக்காக திருடர்களால் திருப்படும் சம்பவங்கள் தொடர்சியாக இடம்பெற்று வருவதால் இருக்கும் கால்நடைகளை விற்றுவிட்டு கால்நடை வளர்ப்பு வாழ்வாதாரத்தில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கால்நடை வளர்ப்பு தொடர்பில் கரைதுறைப்பற்று பிரதேச கால்நடைவளர்ப்போர் கூட்டுறவு சங்க தலைவர் சு.ஞானேஸ்வரன் அவர்கள் கால்நடை பண்ணையாளர்கள் இன்றும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மவட்டத்தில் அதிகளவான கால்நடைகளை கொண்ட பிரதேசமாக குமுழமுனை பிரதேசம் காணப்படுகின்றது இந்த பிரதேசத்தில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட காலம் தொடகம் சுமார் 11 ஆண்டுகளுக்கு மேலாக கால்நடைகளுக்கான மேச்சல் தரவை இல்லாத நிலை தொடர்ந்து கொண்டு செல்கின்றது.

குமுழமுனை பிரதேசத்தில் உள்ள 5 கிராம சேவைகள் பிரிவுகளின் கீழ் வாழ்கின்ற கால்நடை பண்ணையாளர்கள் காணப்படுகின்றார்கள் இவர்களின் 2600 எருமைமாடுகளும் 2850 பசுமாடுகளும் காணப்படுகின்றன இவ்வாhறு சுமார் 5 ஆயிராத்திற்கு மேற்பட்ட கால்நடைகள் மேய்வதற்கான மேச்சல் தரவை இதுவரை எந்த அதிகாரிகளாலம் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

இலங்கையில் மாறிமாறி ஆட்சி செய்யும் அரசுகள் வருகின்றபோது அமைச்சர்களிடம்,பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வடமாகாணசபை உறுப்பினர்களிடம் மாவட்ட செயலாளரிடம் எல்லாம் கோரிக்கை விட்டும் இதுவரை மேச்சல் தரவை இல்லாத நிலை தொடர்கின்றது.

எல்லோரிடம் கால்நடை பண்ணையாளர்களின் இந்த பிரச்சினையினை எடுத்துக்கூறும் போது பொறுங்கள் பொறுங்கள் என்றுதான் சொல்வார்கள் எந்த முன்னேற்றமும் இல்லைமேச்சல் தரவைக்கான நிலம் அனைத்தும் வனவளத்திணைக்களத்திடம் காணப்படுகின்றது காடுகளை அழித்து மாடுகளை மேச்சலுக்கு விடுவது எமது நோக்கம் அல்ல மாடுகள் மேயக்கூடிய சூழலை ஏற்படுத்தி அங்கு கொண்டு சென்று கால்நடைகளை மேயவிடுவதுதான் நோக்கம் இப்போது எங்களுக்கு மேச்சல் தரவை தர முடியாதது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் குமுழமுனைமத்திகிராமம்,குமுழமுனை மேற்கு,குமுழமுனை கிழக்கு,ஆறுமுகத்தான்குளம்,தண்ணிமுறிப்பு போன்ற கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்காக 1000 ஏக்கர் நிலம் குருந்தூர்குள மேல் பிரதேசத்தில் இனம் காணப்பட்டுள்ளது.

இவ்வாறு   கொக்குத்தொடுவாய்,ஆண்டான்குளம். கருநாட்டுக்கேணி,செம்மலை,நாயாறு போன்ற கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்காக நாவல்கேணி என்ற இடத்தில் 1000 ஏக்கர் நிலம் இனம் காணப்பட்டுள்ளதுகேப்பாபிலவு,வற்றாப்பளை பேன்றபகுதிகளில் உள்ள கால்நடை வளர்போருக்காக கொண்டமடு என்ற பகுதியில் 1000 ஏக்கர் நிலம் இனம் காணப்பட்டுள்ளது.

களிக்காடு குளக்கரையினை அண்மித்து 500 ஏக்கர்  அடையாளப்படுத்தி இனம் காட்டி இருந்தோம் குமுழமுனை பிரதேசத்தில் உள்ள கால்நடைகளுக்காக தண்ணிமுறிப்பு பகுதியில் வீமன் கமம் என்ற பிரதேசத்தினை அடையாளப்படுத்தி காட்டி இருந்தும் இதுவரை எந்த இடங்களும் மேச்சல் தரவைக்காக அரசாங்கத்தினால் ஓதுக்கப்படவில்லை ஏன் இவர்கள் கால்நடைகளுக்கு மேச்சல் தரவை தரவில்லை என்றால் எல்லை பிரதேசத்தில் இருக்கின்றபடியால் இந்த இடங்களை தமிழர்களின் கால்நடைகளுக்காக மேச்சல்தரவையாக கொடுப்பது பிடிக்கவில்லை காலந் கடந்து அதுமாறிவிடுமோ என்று யோசிக்கின்றார்கள் போல் தோன்றுகின்றது.

பயிர் செய்யும் காலங்களில் கால்நடைகளை எங்கு கொண்டு செல்வது

இவ்வாறான நிலையில் தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த நிலையில் இனிவரும் காலங்களில் கால்நடைகளை வளர்த்துக்கொள்வதில் பாரிய பிரச்சினை காணப்படுகின்றது. இதனால் கால்நடை வளர்போர்கள் கால்டை வளர்பதில் இருந்து பின்வாங்கம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலை தொடருமானால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டுமல்ல எங்கள் நாட்டிலும் பெரிய பிரச்சினை ஏற்படும் இவ்வாறான நிலை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள எல்லா பிரதேசங்களிலும் இந்த பிரச்சினை காணப்படுகின்றது.

எனவே அரச அதிகாரிகள் திணைக்கள அதிகாரிகள்  மக்கள் பிரதிநிதிகள் கால்நடை வளர்ப்போருக்கான மேச்சல் தரவையினை உருவாக்கி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் இறச்சிக்காக திருரப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளார்.

வாழ்வாதாரத்திற்காக வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளை இறைச்சியாக கடத்தும் கும்பல் ஒன்று செயற்பட்டு வருகின்றது

எங்கள் வீடுகளில் உள்ள மாடுகளை கடத்தி இறைச்சியாக்கி எங்கள் சந்தைக்கே விற்பனைக்கு வருகின்றது 

அரசாங்கதினாலும்,தொண்டு நிறுவனங்களினாலும் புலம்பெயர் அமைப்புக்களாலும் வறுமைக்குட்பட்ட சில மக்களுக்கு வாழ்வாதாரமாக கால்நடைகள் குறிப்பாக மாடு,ஆடுகள் வழங்கப்பட்டு அவற்றை கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தினை கொண்டு செல்லும் குடும்பங்கள் பல காணப்பட்டாலும் பல குடும்ங்கள் தங்கள் முயற்சியால் ஒரு மாட்டினை அல்லது ஒரு ஆட்டினை விலைக்கு வாங்கி அதன் ஊடாக கால்நடைகளை பெருக்கி அவற்றில் இருந்து பால் மற்றும் மேலதிக கால்நடைகளை விற்று வரும் வாழ்வாதார தொழிலையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

கிராமங்களில்  உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் ஒன்று அல்லது இரண்டு கால்நடைகளை வளர்த்து வருகின்றார்கள் இவ்வாறு வளர்க்கும் கால்நடைகளை பால் எடுப்பதற்காக பயன்படுத்திவிட்டு பின்னர் அவிட்டு விடுகின்றார்கள் அவை கிராமங்களில் காணப்படும் சிறிய பற்றைக்காடுகள் மற்றும் கிராமங்களில் உள்ள கழிவுகளை உணவாக உண்டு இரவானதும் தனதுஉரிமையாளரின்  வீட்டு வாசலில் படலைக்கு முன்னால் வந்து படுத்துவிடும் இது இயல்பாக காணப்படுகின்றது.

இவ்வாறான மக்களின் கால்நடைகள் முள்ளியவளை பிரதேசத்திலும் புதுக்குடியிருப்பு போன்ற நகர்புற பிரதேசங்களிலம் இறச்சிக்காக கடத்தப்பட்டு வருகின்ற சம்பவங்கள் தொடச்சியாக அதிகரித்துக்கொண்டு செல்கின்றன இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் கூட வாழ்வாதாரத்திற்காக வளர்க்கும் கால்நடைகளை விற்று வருகின்றார்கள்

கால்நடைகளை வளர்க்கமுடியாத நிலைக்கு திருடர்களின் தொல்லை காணப்படுகின்றது இரவு நேரங்களில் வாகனங்களில் வரும் மாட்டு திருடர்கள் வீதிகளில் கிடக்கும் ஏன் வீட்டு படலைக்கு முன்னால் நிக்கும் அப்பாவி மாடுகளைக்கூட கடத்தி குறைந்த விலைக்கு இறச்சிஆக்கி விற்பனை செய்பவர்களுக்கு விற்று வருகின்றார்கள் இவ்வாறான நடவடிக்கையினை பொலீசாரோ,பொதுசுகாதார பரிசோதர்களோ கண்டுகொள்ளாத நிலை காணப்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

பெயருக்கு ஒருசில மாட்டு திருடர்களை பிடித்தாலும் தொடர்ச்சியாக கால்நடைகள் திருடப்பட்டு வருகின்றன இந்த நிலையில் இனிவரும் காலங்களில் வீடுகளில் வாழ்வாதாரத்திற்கா கால்நடைகளை வளர்க்கமுடியாத நிலையில் கால்நடைகளை வெளி மாவட்டம் மற்றும் ஏனைய பண்ணையாளர்களுக்கு விற்கும்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *