Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Gallery

உடையார் கட்டில் சிறப்புற நடைபெற்ற தந்தைசெல்வாவின் ஜனன தினம்!

தமிழ்த் தேசிய தந்தை, ஈழத்து காந்தி என உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் அன்பாக அழைக்கப்படுகின்ற S.J.V செல்வநாயகம் தந்தை செல்வா அவர்களின் 125வது ஜனன தினம் 31.03.2023 இன்றைய தினம் மாலை 4மணியளவில் முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு மண்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கியஸ்தருமான…

பாலைமரத்தடி ஸ்ரீ முத்துமாரியம்மன் சித்திரத்தேர் நேரலை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்தில் பலைமரத்தரடி ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் புதிய சித்திரத்தேர்த்திருவிழா 01.04.23 சனிக்கிழமை காலை 7.00 மணியளவில் அப்பாளுக்கு அபிசேகம் இடம்பெற்று காலை 8.00 மணிக்கு பதிய சி;த்திரதேரிலே அம்பாள் அமர்ந்து வீதி ஊலாவர அருள்பாலித்துள்ளார். இந்த நாளில் தீச்சட்டி,பாற்செம்பு,காவடி ஆகிய நேர்த்திக்கடன்களை அடிவர்கள் செய்யவுள்ளார்கள். இந்த சித்திர தேர்திருவிழாவின் நேரலையினை கீழ் காணும்…

குப்பிவிளக்கில் வாழ்ந்த குடும்பம் 6மாத குழந்தையினை பலிகொடுத்த சோகம் விசுவமடுவில்!

குப்பிவிளக்கில் வாழ்ந்த குடும்பம் 6மாத குழந்தையினை பலிகொடுத்த சோகம் முல்லைத்தீவு விசுவமடுவில்! குப்பிவிளக்கு வீழ்ந்து தீப்பற்றியதில் காயமடைந்த 6 மாத ஆண்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் கிராமத்தில் அடிப்படைவசதிகள் அற்ற நிலையில் தற்காலிக வீட்டில் வசித்துவந்த இளம்குடும்பம் ஒன்றிற்கு இந்த துயர சம்பசம் இடம்பெற்றுள்ளது. சின்னையா சுறோமி…

யாழில் ஒரு மாதத்தில் 700 பேருக்கு கண்சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவர்கள்!

யாழ் போதனா வைத்தியசாலையில் வட மாகாணத்தில் இருக்கின்ற பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் கிரமமான கண் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ALAKA FOUNDATION, Malaysia மற்றும் Assist RR / UK நிறுவனத்தி ஒழுங்குபடுத்தலில் கண்சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியவர்களுக்கு போக்குவரத்து ஒழுங்கு மேற்கொள்ளப்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டு கண்சத்திர சிகிச்சை நடைபெறுகின்றது. இன்று 30.03.23 வவுனியா…

விவசாயிகளுக்கும் QR முறைமை இனிவரும் காலங்களில்!

நாட்டில் பெற்றோலுக்கு QRநடைமுறை தற்போது உள்ள நிலையில் சமூர்த்திக்கொடுப்பனவு பெறுபவர்களுக்கும் இந்த நடைமுறையினை கொண்டுவரும் நடவடிக்கையில் பதிவு நடவடிக்கைகள் கிராமங்கள் தோறும் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் விவசாயிகளுக்கும் உரம் மற்றும் கிருமிநாசினிகளை பகிர்ந்தளிப்பதற்காக QR குறியீட்டு முறைமையை அறிமுகப்படுத்தவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

வெடுக்குநாரி -மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் பார்வை!

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் பார்வை! வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் பார்வை! வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வைக்கப்பட்ட சிவன் சிலைகள் மற்றும் வழிபாட்டு பொருட்கள் உடைத்து எறியப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய…

இலங்கை அரசின் தொலைக்காட்சி ஒன்று படுநட்டத்தில் இயங்குகின்றது பணிவிலக அறிவிப்பு!

இலங்கை அரசாங்கத்தின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நட்டத்தில் இயங்கிவருவதாகவும் அதில் பணியாற்றுபவர்கள் தாமாக முன்வந்து பதவி விலகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதவி விலகுபவர்களுக்கான விண்ணப்பபடிவங்கள் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தாமாக முன்வந்து வெளியேறும் றூபவாகினி கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 25 இலட்சமும்,குறைந்த பட்சமாக 5 இலட்சமும் இழப்பீடாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பல நிறுவனங்கள் நட்டம்…

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவுகளின் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்திவரும் போராட்டம் 2213 ஆவது நாளான 30.03.2023 இன்று நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின்  சங்கத்தின் அலுவலகத்திற்கு முன்னால் முல்லைத்தீவு முதன்மை வீதியில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுக்கு நீதி கோரி…

புதுக்குடியிருப்பில் நடைபாதை வியாபாரத்தினார் சந்தை வணிகர்கள் பாதிப்பு மனு கையளிப்பு!

புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் நடைபாதை வியாபாரிகளின் வியாபார நடவடிக்கையினால் சந்தை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொதுச்சந்தை அனைத்து வணிபங்களின் உரிமையாளர்கள் முல்லைத்தீவு உள்ளுராட்சி மன்ற ஆணையாளருக்கு மனுஒன்றினை கையளித்துள்ளார்கள். அந்த மனுவில்புதுக்குடியிருப்பு பொதுச்சந்தை மரக்கறி வாணிப உரிமையாளர்கள் மற்றும் புடவை வாணிப உரிமையாளர்கள் பழக்கடை வாணிப உரிமையாளர்கள் மற்றும் மீன் வாணிப உரிமையாளர்கள் ஆகிய நாம் தங்களுக்கு…

கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்படவேண்டும்-யாழ் மறைமாவட்ட குருமுதல்வர்!

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தில் புத்தர் சிலைகள் அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் யாழ்ப்பாண மாவட்ட செயலருக்கு வலியுறுத்தியுள்ளார். யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் இந்த கோரிக்கையை யாழ்ப்பாண மாவட்ட செயலருக்கு கடிதம் மூலம் விடுத்துள்ளார். அக்கடிதத்தில், புனித அந்தோனியார் திருத்தலம் அமைந்துள்ள கச்சதீவில் புத்தர்…