Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

யாழ்ப்பாணம்

நாளைமுதல் யாழ்-நாகபட்டினம் கப்பல் சேவை!

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் சேவை நாளை 10ஆம் திகதிமுதல் ஆரம்பமாக இருக்கிறது. பயணிகள் சேவையில் ஈடுபட உள்ள கப்பலின் பெயர் செரியபானி. இந்தக் கப்பலில் 150 பயணிகள் பயணிக்க முடியும். பயண நேரம் 3 மணிநேரம் ஆகும். ஆரம்ப கட்டணமாக இருவழிப்பயணத்துக்கு ரூபா 52,000/- வரை அறவிடப்படலாம் என தெரியவருகிறது. பயணிகள் 50 கிலோ…

நீதிபதிக்கு நீதிகோரி முல்லைத்தீவில் திரண்ட வமாகாண சட்டத்தரணிகள்!videos

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணி களின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாணங்களிலுள்ள சட்டத்தரணிகள் இணைந்து மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது இன்று (03.09.2023) காலை 11 மணியளவில் முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக…

JKஎனப்படும் ஆட்கடத்தல் காரன் கைது-கனடா ஏற்றுவதாக ஏமாற்றப்பட்ட பலர்!

ஜே.கே எனப்படும் ஆட்கடத்தல் காரன் கைது வெளிநாடு ஏற்றுவதாக ஏமாற்றப்பட்ட பல நூற்றுக்கணக்கானவர்கள். இலங்கையில் இருந்து வெளிநாட்டு அனுப்பிவைப்பதாக கூறி நட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றிய ஜே.கே.எனப்படும் ஆட்டகடத்தல்காரன் ஒருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் போலியான கடவுச்சீட்டு மூலம் நாட்டைவிட்டு வெளியேற…

தமிழர்கள் மீதான சிங்கள இனவெறி மனப்பான்மை என்றும் மாறாது-சீமான்!

தியாகதீபம் திலீபன் அண்ணாவின் நினைவு ஊர்தி தாக்கப்பட்டமையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை.

தமிழ் மக்களுக்கு நினைவுகூரும் உரிமை கூட மறுக்கப்பட்டு வருகின்றது!

திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் அண்ணாவை நினைவேந்தி அவரது உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது சிங்கள அடிப்படை வாதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை மாணவர் சமூகமான நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம். திலீபன் அண்ணாவின் உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்தியானது தமிழர் தலைநகரிலேயே தாக்கப்பட்ட இந்தச் சம்பவமானது வடகிழக்கு மாகாணங்களில் இன்னமும்…

தாக்குதல்- இனவாதத்தின் உக்கிரத்தையே வெளிப்படுத்துகிறது!

தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய நினைவேந்தல் ஊர்திமீது, திருகோணமலை கப்பற்துறையருகே சிங்களக் காடையர்கள் மேற்கொண்டுள்ள மிலேச்சத்தனமான தாக்குதல், இந்தநாட்டில் இனவாதத்தீ நீறுபூத்த நெருப்பாகவே இன்னமும் கனன்றெரிகிறது என்பதை இன்னுமொருமுறை நிரூபணம் செய்திருக்கிறது. இருநாட்டு அரசுகளின் கவனத்தையும், ஈழத்தமிழர்களுக்கான அடிப்படை நியாயத்தையும் கோரி 36 ஆண்டுகளின் முன்னர் அகிம்சைப் போராட்டம் நடாத்திய, திலீபன் என்கிற தியாகியின் உருவப்படத்துக்கும்,…

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி முல்லைத்தீவில் நடைபெற்றுள்ளது!

வடமாகாண கல்வித்திணைக்களத்தின் அனுசரணையுடன் 2023 ஆம் ஆண்டுக்கான வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான அரை மரதன் ஓட்டப்போட்டி 22.08.23 இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஆராம்பித்து குமுழமுனை மாகாவித்தியாலயம் முன்பாக நிறைவடைந்துள்ளது. 21 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த மரதன் ஓட்டப்போட்டியில் வலயமட்டத்தில் தெரிவான பாடசாலைகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள். இதனை முல்லைத்தீவு…

இளவயதினரின் உயிரிழப்பு சம்பவங்களால் கதறும் குடும்பங்கள்!

அண்மையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக தவறான முடிவுகளை எடுத்து தங்கள் உயிரினை மாய்த்க்கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்கின்றது குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு வாரத்தில் மாத்திரம் நான்கு தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மூன்றும் குமுழமுனை பிரதேசத்தில் ஒன்றும் என பதிவாகியுள்ளது யாழ்ப்பாணத்தில் இரண்டு பல்கலை மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள்…

வற்றாப்பளைக்கு வந்துவிட்டு சென்ற இளைஞன் விபத்தில் பலி!

யாழ்ப்பாணம் கொடிகாமம் வரணி பகுதியில் அதிகாலை 2 மணியளவில் மின்கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி குடத்தனை பகுதியை சேர்ந்த 31 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வற்றாப்பளைக்குச் சென்று திரும்புகையில் இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

கஜேந்திரகுமாரை தாக்கிவிட்டு தப்பிஓடிய புலனாய்வாளர்-சுடவந்தார்களா?

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினை தாக்கிவிட்டு புலனாய்வாளர் ஒருவர் தப்பிஓடும் காட்சி சமூக வலைத்தளங்களில் பதிவாகியள்ளது. இதனால் அந்த இடத்தில் பதட்டமான நிலை உருவாகியுள்ளது.இன்று மாலை பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வடமராட்சி கிழக்குப்பகுதியில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த வேளை திடிரென மோட்டார் சைக்கிளில் உட்புகுந்த இருவர்…