Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

முல்லைத்தீவு

மிக பிரமாண்ட தயாரிப்பில் பண்டாரவன்னியன் நாடகம்!

முல்லைத்தீவு முள்ளியவளை மாவட்டத்தில் நாட்டுக்கூத்து உள்ளிட்ட கலைகளை வளர்த்தெடுக்கும் கிராமங்களில் ஒன்றாக காணப்படும் முள்ளியவளை பிரதேசத்தில் பல விருதுகளை வென்ற கலைஞர்களின் தரமான நடிப்பில் உருவான வன்னி மண்ணின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் வரலாற்று நாடகம் எதிர்வரும் 20.04.2024 அன்று இரவு 8.00 மணிக்கு அரங்கேறவுள்ளது. முதுபெரும் கலைஞர் என்.எஸ். மணியம் அவர்களின் நெறியாள்கையில்…

முள்ளியவளையில் வித்தினை ஏற்படுத்திய இரு இளைஞர்களும் பலி!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மாமூலைப்பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் இன்று 09.04.2024 இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மாமூலை விஸ்ணு கோவில் வீதியில் வேகமாக நேர் எதிரே வந்த இரு மோட்டார் சைக்கில்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தின் போது முள்ளியவளை பூதன்வயல்…

புதுக்குடியிருப்பில் குட்டைக்குள் விழுந்த வயோதிபர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் கைவேலிப்பகுதியில் வயல்நீர் வடிந்தோடும் குட்டை ஒன்றிற்குள் வீழ்ந்து வயோதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று(11) இடம்பெற்றுள்ளது. தேவிபுரம் அ பகுதியினை சேர்ந்த 65 அகவையுடைய முனுசாமி திருச்செல்வம் என்பவர் கூலி வேலை செய்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் கைவேலி வயல்வெளிப்பகுதியில் காணப்படும் குறித்த குட்டைக்கு அருகில் அவரது மிதிவண்டி காணப்பட்டுள்ளது. இதனை…

வன்னியின் பெரும்சமர்- கிளிநொச்சி மகாவித்தியாலயம் தனதாக்கியுள்ளது!

வன்னியின் பெரும்சமர் எனப்படும் கிளிநொச்சி மாகவித்தயாலய அணிக்கும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி அணிக்கும் இடையிலான இரண்டுநாள் துடுப்பாட்ட போட்டியில் கிளிநொச்சி மகாவித்தியாலய அணி வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கியுள்ளது. வன்னியின் பெரும்சமர் 13 ஆவது தடவையாக இம்முறை முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்றுள்ளன. இன்று இறுதிநாள் போட்டியில் 111 ஓட்டங்கள் பெற்று கிளிநொச்சி…

பிரமந்தனாற்றில் கத்திக்குத்திற்கு பலியான இளைஞனுக்கு நீதிகோரி திரண்ட மக்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரமந்தனாற்று  பகுதியில் இளைஞன் ஒருவனால் கத்திக்குத்திற்கு இலக்காகி உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவரின் உயிரிழப்பிற்கு நீதிகோரியும் கைதான சந்தேக நபருக்கு பிணைவழங்கவேண்டாம் என்றும் வலியுறுத்தியும் கிராம மக்கள் ஒன்றிணைந்து 09.04.2027 அன்று  மனு ஒன்றினை கையளித்துள்ளார்கள். கடந்த 04.04.2024 அன்று கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலத்தில் இடம்பெற்ற விளையாட்டு போட்டியினை…

மாங்குளம் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி!

வெகுவிமர்சையாக நடைபெற்ற முல்லைத்தீவு மாங்குளம் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டியானது பாடசாலையின் அதிபர் இ. கோகுலன் தலைமையில் இன்று (09.04.2024) மாலை 02.30 க்கு பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இல்ல மெய்வல்லுநர் போட்டியானது ஒலிம்பிக் தீபம்…

வன்னிப்பெருச்சமர்-2024 துடுப்பாட்ட போட்டி ஆரம்பம்!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கும் கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கும் இடையிலான வருடாவருடம் நடைபெறும் ”வன்னிப்பெருச்சமர்” துடுப்பாட்ட போட்டியானது இந்த வருடமும் சிறப்பான முறையில் இன்றைய தினம் (10) காலை 9.00 மணிக்கு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மைதானத்தில் சிறப்பு ஆரம்பமானது. இந்தப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்கள் பிரதம…

மாணிக்கபுரத்தில் மாட்டு கள்ளன் வசமாக மாட்டிய சம்பவம்!

முல்லைத்தீவு விசுவமடு மாணிக்கபுரம் பகுதியில் மக்களின் வளர்ப்பு மாடுகளை திருடி இறைச்சிக்காக விற்பனை செய்யும் நபர் ஒருவரை கிராமமக்கள் கையும் களவுமாக பிடித்து பொலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மாணிக்கபுரம் பகுதியில் மக்களின் வாழ்வாதாரமாக காணப்படும் பசுமாடுகள் சுமார் 11 பேரின் கால்நடைகள் காணாமல் போயுள்ளன. இந்த நிலையில் மக்களின் கால்நடைகளை களவாக படித்து…

அரிசி விலையினை குறைக்க கோரி முல்லைத்தீவிர் ஆர்ப்பாட்டம்!

இலங்கை அரசே அரிசி விலையை உடனடியாக 100 ரூபாய் விற்கு கொண்டு வருக- வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டுவலியுறுத்தல் இலங்கை அரசு மக்களின் சோற்றில் கை வைக்காமல் அரிசியின் விலையை 100 ரூபாயின் கீழ் குறைத்து மக்களின் பட்டினி சாவை தவிர்த்து பொருளாதார சுமையை உடனடியாக குறைக்க வேண்டும் என வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு…

வடமாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை புதுக்குடியிருப்பில் ஆரம்பம்!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வடக்கு மாகாண தொழிற்துறைத்  திணைக்களம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்துகின்ற  வட  மாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை புதுக்குடியிருப்பில் இன்று சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது  வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூர் உற்ப்பத்தியாளர்களின் உற்ப்பத்திகளை விற்ப்பனை செய்வதும் அவர்களது உற்ப்பத்தி பொருட்களை  வந்து அவர்களது உற்ப்பத்திகளை வெளிக்கொண்டு வரும் நோக்கமாகவும் ஏற்ப்பாடு…