வவுனியாவினை சேர்ந்த இளைஞர்களை காவுகொண்ட முல்லைத்தீவு கடல்(முழுவிபரம்)

0 363

முல்லைத்தீவு கடலில் கடல்குளிப்பில் ஈடுபட்ட மூவர் காணாமல் போன நிலையில் ஒருவர் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்!

முல்லைத்தீவு சுற்றுலாகடற்கரையில் இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
வவுனியாவில் இருந்து வாகனத்தில் வருகைதந்த பெண் ஒருவர் உள்ளிட்ட நான்கு பேரில் மூன்று இளைஞர்களும் கடலில் கடற்குளிப்பில் ஈடுபட்டுள்ளார்கள் இதன்போது மூவரும் மூழ்கிக்கொண்டு செல்வதை அவதானித்த அவர்களுடன சென்ற யுவதி அருகில் இருந்தவர்களுக்கு சொல்லி அறிவத்துள்ளதை தொடர்ந்து கடற்கரையில் கூடிய மக்கள் கடலில் மூழ்கியவர்களை கரையில் நின்று தேடியுள்ளார்கள்.

இதன் போது வவுனியா மதகுவைத்தகுளம் 27 அகவையுடைய மனோகரன் தனுசன், தோணிக்கல் வவுனியாவினை சேர்ந்த 26 அகவையுடைய விஜயகுமாரன் தர்சன், வவுனியா மதவுவைச்சகுளத்தினை சேர்ந்த 26 சிவலிங்கம் சகிலன் ஆகியோரே கடலில் காணாமல் போயுள்ள நிலையில்சுமார் ஒரு மணிநேரம் கடந்த நிiலியல் மாலை 6.30 மணியளவில் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

மனோகரன் தனுசன் என்ற இளைஞனின் உடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் காணாமல் போன ஏனையவர்களை தேடும்பணி மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இருந்து வாகனம் ஒன்றில் இவர்கள் நால்வரும் முல்லைத்தீவு கடற்கரைக்கு வந்து கடற்குழியலில் ஈடுபட்ட வேளை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.