வடக்கில் இருந்து மலையகத்திற்கு சென்ற நிவாரண உதவி!

0 140

நாங்கள் சாப்பிடும் வரை எங்கள் மக்களையும் சாப்பிடவைப்போம் என்ற தொனிப்பொருளில் கொரோனா இடர்காலத்தில் வருமானம் அற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடக்கு கிழக்கு தழுவியரீதியில் உலர் உணவு பொருட்களை வழங்கிவந்த தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கும் நிவாரண உதவிப்பொருட்களை வழங்கிவைத்துள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.


மலையக தமிழ்மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மழைவெள்ளத்தின் இயற்கை அனர்த்த்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.


இவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களை நோக்கி தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நிவாரண நடவடிக்கை நீண்டுசென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.


வடக்கு மாகாணத்தில் பல்வேறு இடங்களிலம் கடந்தகாலங்களில் வழங்கிவைத்த நிலையில் கிழக்கு மாகாணம் மற்றம் மலையக பகுதிகளில் அதிகளவான மக்கள் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றார்கள் இந்த மக்களுக்காக ஒரு சிறிய உதவியாக இந்த உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.


இந்த உணவு பொருட்கள் வழங்கிவைக்கும் நடவடிக்கையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செல்வராசா கஜேந்திரன் சட்டசாளர் க.சுகாஸ்,காண்டிபன், உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் நேரடியாக சென்று மக்களுக்கான உதவிகளை வழங்கிவருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.