சமூக ஊடகங்களின் கருத்து உண்மைக்கு புறம்பானவை!

0 196

எதிர்வரும் 14 ஆம் திகதி நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை நீக்கப்படும் என்றும் இராணுவத்தளபதி சவேந்திரசில்வா அறிவித்துள்ளார்.


14 ஆம் திகதிக்கு பின்னரும் பயணத்தடை நீடிப்பதா இல்லையா என்று இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை. 14 ஆம் திகதிதிக்கு பின்னரும் பயணத்தடை நீடிக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி தொடர்பில் கருத்துதெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொவிட் தடுப்பு செயலணி இந்த வாரத்திற்குள் கூடவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பொதுச்சுகாதர பரிசோதகர்கள் மற்றம் விசேட மருத்துவநிபுணர்கள் உள்ளிட்ட சுகாதார தரப்பினர் தொற்று நிலமை குறைவடையும் வரை கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டாம் என்று கூறிவருகின்றார்கள்.

கடந்த மே மாதம் 21 ஆம் திகதி நாட்டில் அமுல்படுத்தப்பட்டட பயணக்கட்டுப்பாடு யூன் 14 ஆம் திகதி நீக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.