Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதிச்சுற்றிற்கு தெரிவு செய்யப்பட்ட 16அணிகள்!

வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 14 பாடசாலைகளின் பங்கேற்புடன் நேற்று (02.04.2024) சனிக்கிழமை முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசபை மைதானத்தில் இடம்பெற்ற 10 மற்றும் 12 வயதுகளுக்குட்பட்டோருக்கான தகுதிகாண் கால்பந்தாட்டப் போட்டிகளின் ஆண்கள் பிரிவில் 8 அணிகளும் பெண்கள் பிரிவிலிருந்து 8 அணிகளுமாக 16 அணிகள் இறுதிச்சுற்றுப் போட்டிகளில் ஆடுவதற்கு தகுதி பெற்றுள்ளன.

நெஸ்லே லங்கா நிறுவனத்தின் மைலோ வர்த்தக நாமத்தின் அனுசரணையில் இடம்பெறும் இப்போட்டித் தொடரை கல்வி அமைச்சின் மேற்பார்வையோடு இலங்கை பாடசாலைகள், கால்பந்தாட்ட சங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு நடத்தி வருகின்றது.

இதன்படி நேற்று (02.03.2024) சனிக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான தகுதிகாண் போட்டித் தொடரில் பங்கேற்று மோதிக் கொண்ட 28 அணிகளில் 10 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் இரணைப்பாலை றோ.க. மகா வித்தியாலயம், அளம்பில் றோ.க. மகா வித்தியாலயம், முத்தையன்கட்டு இடதுகரை அ.த.க பாடசாலை, குரவில் தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் நான்கு அணிகளும், பெண்கள் பிரிவில் உடையார்கட்டு ஆரம்ப பாடசாலை, அளம்பில் றோ.க. மகா வித்தியாலயம், சிலாவத்தை தமிழ் வித்தியாலயம் , முத்தையன்கட்டு இடதுகரை அ.த.க பாடசாலை ஆகிய பாடசாலைகளின் நான்கு அணிகளும் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இதேவேளை 12 வயதுக்குட்பட்டோருக்கான தொடரின் ஆண்கள் பிரிவில்

முல்லைத்தீவு மகா வித்தியாலயம்,  

சிலாவத்தை தமிழ் வித்தியாலயம் , கோம்பாவில் விக்னேஸ்வரா வித்தியாலயம், குரவில் தமிழ் வித்தியாலயம் ஆகிய அணிகளும், பெண்கள் பிரிவில் முல்லைத்தீவு றோ.க.தமிழ் மகா வித்தியாலயம், 

அளம்பில் றோ.க. மகா வித்தியாலயம், குமுழமுனை மகா வித்தியாலயம், உடையார்கட்டு மகாவித்தியாலயம் ஆகிய அணிகளும் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 18 ஆண்கள் அணிகளும் 10 பெண்கள் அணிகளுமாக பங்கேற்றிருந்த நான்கு பிரிவுகளை சேர்ந்த 28 அணிகளில் 16 அணிகள் இறுதிச்சுற்றுப் போட்டிகளில் ஆடுவதற்கு தகுதி பெற்றுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கான தகுதிகாண் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் வவுனியா மாவட்டத்துக்கான தகுதிகாண் போட்டிகள் மார்ச் மாதம் 9ஆம் திகதியும் கிளிநொச்சி மாவட்டத்துக்கான தகுதிகாண் போட்டிகள் 16ஆம் திகதியும் யாழ். மாவட்டத்துக்கான தகுதிகாண் போட்டிகள் 22ஆம் திகதியும் நடைபெறவுள்ளன. இறுதி சுற்றுப் போட்டி எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இலங்கையில் சிறுவயதிலுள்ள மாணவர்களின் விளையாட்டுகளை வளர்ப்பதற்கும், விளையாட்டுகளில் பாலின பன்மைத்துவத்தை மேம்படுத்துவதற்குமான தனது பயணத்தில், இலங்கையின் எதிர்கால சந்ததியினரை வளப்படுத்தும் நோக்குடனும் தேசிய ரீதியில் வீரர்களை முன்னோக்கி கொண்டு செல்லவும் இந்த நிகழ்வுக்கு நெஸ்லே மைலோ அனுசரணை அளிக்கிறது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக முல்லைத்தீவு வலய கல்விபிரதி கல்வி பணிப்பாளர் ப.சுரேஸ்குமார்

சிறப்பு அதிதிகளாக நெஸ்லே லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் றுவான் வெலிகல, நெஸ்லேயின் விற்பனை மேம்படுத்தல் செயற்படுதல் நெஸ்லே சிரேஸ்ட முகாமையாளர் சஜீவ விக்கிரமசிங்க, நெஸ்லே வடபிராந்திய சிரேஸ்ட விற்பனை முகாமையாளர் எஸ்.ரவீந்திரன், மைலோ இலட்சினை முகாமையாளர் சமரிது விதாரன, முல்லைத்தீவு 591 ஆவது படைப்பிரிவின் இராணுவத்தளபதி கேணல் உபுல் ஜெயரத்ன, முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.அமரசிங்க, கரைதுறைப்பற்று பிரதேசசபை செயலாளர் இராசயோகினி ஜெயக்குமார், முல்லைத்தீவு பிராந்திய சுகாதார பணிமனையின் திட்டமிடல் பணிப்பாளர் வைத்தியர் சுதர்சன், உடற்கல்வி ஆசிரியர் ஆலோசகர் பி.ஜி.கே.டிலான் ,இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பொது செயலாளர் என்.எஸ்.பி.திஷாநாயக்க, இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பொருளாளர் சரத் ரத்னாயக்க, 

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை உதைபந்தாட்ட இணைப்பாளர் ஜெ.டனிஸ், நெஸ்லே நிறுவனத்தின் முகாமையாளர் றஜீந்திர, முல்லைத்தீவு பிராந்திய பிரதி விற்பனை முகாமையாளர் பி.அமலன் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *