மாங்குளம் சமுர்த்தி வங்கி வளாகத்தில் விற்பனை சந்தை திறந்து வைப்பு!

0 67

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி அபிமான விற்பனை சந்தைகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் அனைத்து சமுர்த்தி வங்கிகளாலும்   ஆரம்பிக்கப்படுகின்றது அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவின் காணப்படுகின்ற ஒட்டுசுட்டான் மற்றும் மாங்குளம் ஆகிய சமுர்த்தி  வங்கிகளில் இன்று சமுர்த்தி அபிமானி விற்பனை சந்தை திறந்து வைக்கப்பட்டுள்ளது

புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி பயனாளிகள் சமுர்த்தி வங்கிகளில் இருந்து பெற்ற கடன்களுக்கூடாக ஆரம்பித்த சுயதொழில்கள் ஊடாக செய்த உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாக குறித்த சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் மாங்குளம் சமுர்த்தி வங்கி அலுவலக வளாகத்தில் இன்று சமுர்த்தி  அபிமான விற்பனை சந்தை திறப்பு நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த.அகிலன்  அவர்களுடைய தலைமையில் ஆரம்பமாகியுள்ளது

குறித்த நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் தா.அகிலன் முல்லைத்தீவு  மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி ஜெயபவானி கணேசமூர்த்தி புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் முத்துசாமி முகுந்தகஜன் மாங்குளம் கிராம அலுவலர் த.தனபால்ராஜ்  தலைமையக சமுர்த்தி முகாமையாளர் திருமதி சுதாஜினி சமுர்த்தி மகாசங்க முகாமையாளர் திருமதி இ.பிரதா ஒட்டுசுட்டான் சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி பா.கஜனரதி  மாவட்ட சமுர்த்தி கருத்திட்ட  முகாமையாளர் திருமதி சு.நிசாந்தினி மாங்குளம் சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி            ற .சுதர்சினி மாங்குளம் சமுர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபை தலைவர் செ.சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இந்நிகழ்வில் சந்தையினை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளனர்

சந்தையானது இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது இதன்போது மாங்குளம் சமுர்த்தி வங்கி   பிரதேசத்திலே வங்கி ஊடாக கடன்களை பெற்று தங்களுடைய சுய தொழில்களை முன்னெடுத்து வருகின்ற பலரும் தங்களுடைய உற்பத்திகளைக் கொண்டு வந்து சந்தைப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.