உழவு இயந்திரம் மீதுதாக்குதல் நடத்திய காட்டுயானை-தேவிபுரத்தில் பரபரப்பு!

0 263

தேவிபுரத்தில் காட்டுயானை அட்டகாசம் 50ற்று மேற்பட்ட தென்னைமரங்கள் அழிப்பு உழவு இயந்திரம் சேதம்!


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேவிபுரம் பகுதியில் மக்களின் தோட்டங்களுக்குள் புகுந்துகொண்ட நான்கு யானைகளால் விவசாயிகள் பெரும் இழப்பினை சந்தித்துள்ளார்கள்.


20.02.21 நேற்று இரவில் இருந்து நான்கு காட்டுயானைகள் 50ற்கு மேற்பட்ட தென்னம்பிள்ளைகளை அழித்துள்ளதுடன் விவசாயிகளின் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளது. 


விவசாய நிலங்களின் வேலி தூண்கள் பல யானையால் உடைத்தெறியப்ப்பட்டுள்ளதுடன் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றினை யானை தாக்கி சேதப்படுத்தியுள்ளதுடன் மக்களுக்கு உயிர் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது.
யானையின் தாக்குதலில் உழவு இயந்திரத்தின் முன் சில் ஒன்று உடைக்கப்டப்டுள்ளதுடன் இயந்திர பாதுகாப்பு பெட்டியும் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் சுமார் இரண்டு இலட்சத்தி ஜம்பதாயிரம் ரூபா வரை சேதம் ஏற்படும் என உழவு இயந்திர உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தேவிபுரம் பகுதியில் தென்னை வளர்ப்பு நிலக்கடலை செய்கை,நெல்,பூசணி,வாளை போன்ற விவசாய செய்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரும் இவ்வாறு விவசாய கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை வாழ்வாதார பயிர்களை அழித்து நாசம் செய்துள்ளது.


இன்று 21.02.21 நண்பகல் 2.00 மணி வரை குறித்த யானையினை கிராமத்தில் இருந்து விரட்டும் நடவடிக்கையில் 80ற்கு மேற்பட்ட கிராம இளைஞர்கள் ஈடுபட்டும் சுமார் இருபதாயிரம் ரூபாவிற்கு மேல் வெடிகளை வாங்கி கொழுத்தி போட்டும் யானைகள் பற்றைக்காட்டில் மறைந்து நின்ற மக்களுக்கு அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றது.


ஒரு யானை கிராமத்தினை விட்டு வெளியேறி பரந்தன் புதுக்குடியிருப்பு வீதி மஞ்சல்பாலத்தடியினால் சென்ற வேளை வீதியால் சென்ற மக்கள் பலரும் அச்சத்துடன் பயணித்துள்ளார்கள்.
ஏனைய மூன்று யானைகளும் பற்றைக்காட்டில் நின்று விவசாயிகளை அச்சுறுத்தி வருகின்றது.விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றும் யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்தும் இதுவரை அவர்கள் வரவில்லை என்று மக்கள் தெரிவித்துள்ளார்கள்.யானைவேலி அமைத்து தருவதாக சொல்லியும் தீர்மானங்கள் எடுத்தும் இதுவரை எந்த வேலையும் நடைபெறவில்லை 


மக்களின் தேவைகளையும் விவசாயத்தினையும் காப்பாற்ற அரசு முன்வரவேண்டும் அரசு அக்கறையின்மையாக இருப்பதையே காணக்கூடியதாக இருக்கின்றது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.


கொடூரமான யானைகள் மக்களின் வாழ் இடங்களிற்குள் வந்து வாழ்வாதாரத்தினை அழிக்கும் நடவடிக்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.