நேற்றய தினம் வவுனியாவில் சிறுவர்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 15

வவுனியாவில் இரு சிறுவர்கள் உட்பட 5 பேருக்கு நேற்றுக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, பட்டாணிச்சூரில் கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, வவுனியா நகரப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றுபவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதில் ஒரு தொகுதி முடிவுகள் நேற்றும் (18) வெளியாகியிருந்தன. அதில் இரு சிறுவர்கள் உட்பட 5 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா நகரப் பகுதியில் உள்ள வியாபார நிலையங்கள் மற்றும் பட்டாணிச்சூர் பகுதியில் உள்ளவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களே தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த 10 நாள்களில் வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 210 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ரயிலில் பயணித்த ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதையடுத்து அவரது பயணம் தடுக்கப்பட்டு அவர் சுகாதாரப் பிரிவினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.