வன்னியர் சமூகத்துக்கு உள் ஒதுக்கீட்டை அறிவிக்கும்படி பாமக வலியுறுத்தியுள்ளது.

0 21

தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடைபெற்று வரும் நிலையில் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் கோரிக்கைகளும் அடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டு விவகாரத்தை பாமக கையில் எடுத்துள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு என்பது பாமக நடத்திய பல்வேறு போராட்டங்களின் அடிப்படையில் கிடைத்தது என அக்கட்சியினர் தொடர்ந்து கூறிவருகின்றனர். ஆனால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடம்பெற்றுள்ள 115 சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அதை அனுபவித்து வருவதாகவும் வன்னியர் சமூகத்தினர் இந்த சலுகையை அதிகம் பெற முடியாமல் உள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். எனவே வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமகவினர் தொடர்சியாக போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.

இந்தக் கோரிக்கையை நிறைவேற்றினால் தான் கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என பாமக அதிமுக அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. இந்நிலையில் பாமக இதற்கு முன் வலியுறுத்திய சாதிவாரி கணக்கெடுப்புக்கு க்ரீன் சிக்னல் காட்டியது அதிமுக. இது கோரிக்கையை தள்ளிப்போடும் நடவடிக்கை என பாமகவுக்குள் இருந்து அதிருப்தி குரல்கள் ஒலித்தன. இந்நிலையில் நேற்று பாமகவின் நிர்வாகக் குழு கூட்டம் ஆன்லைனில் நடைபெற்றது. அதில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.